TNPSC Thervupettagam

லகன்பூர் தெருவோர உணவகம் - PM SVANidhi திட்டம்

July 19 , 2026 8 days 60 0
  • ஒழுங்கமைக்கப்பட்ட தெருவோர உணவு வசதியை மேம்படுத்துவதற்காக 'பிரதான் மந்திரி ஸ்வநிதி தெருவோர உணவு மையத் திட்டத்தின்' கீழ் முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நகரங்களில் ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள லகன்பூரும் ஒன்றாகும்.
  • இந்த முன்னெடுப்பானது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் (MoHUA) 'பிரதான்  மந்திரி தெருவோர வியாபாரிகளின் ஆத்மநிர்பார் நிதி' (PM SVANidhi) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
  • நவீன விற்பனை உள்கட்டமைப்பு, சுகாதாரமான உணவு இடங்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு சிறந்த வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதை இந்தத் தெருவோர உணவு மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • லகன்பூர் ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன் இது பஞ்சாபிலிருந்து ஒன்றியப் பிரதேசத்திற்குள் நுழையும் முக்கிய நுழைவாயிலாகச் செயல்படுகிறது.
  • பிணையமற்ற செயல்பாட்டு மூலதனக் கடன்களை வழங்குவதற்காகவும், தெருவோர வியாபாரிகளின் நிதி உள்ளடக்கத்தை ஆதரிப்பதற்காகவும் வேண்டி 2020 ஆம் ஆண்டில் பிரதமரின் ஸ்வநிதி திட்டம் தொடங்கப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்