மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தின் பகுதியளவு பசுமையான திலாரி காட்டில் லகோசெயிலஸ் ஹயாவோமியாசாகி என்ற புதிய இழைகள் கொண்ட நத்தை இனம் கண்டறியப்பட்டது.
இயற்கை கருப்பொருள் கொண்ட படங்களுக்கு புகழ் பெற்ற ஜப்பானிய இயங்குபடக் கலைஞரான ஹயாவோ மியாசாகியைக் கௌரவிக்கும் விதமாக இந்த இனத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
இது வடக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் லகோசெயிலஸ் இனத்தின் முதல் பதிவு ஆகும்.
தற்போது அதன் அறியப்பட்ட பரவல் எல்லை ஆனது இந்தியத் தீபகற்பத்தில் 540 கிலோ மீட்டர் வடக்கு நோக்கி விரிவாகியுள்ளது.