லித்தியம் சுத்திகரிப்பு நிலையம்
December 29 , 2020
1609 days
623
- இந்தியாவின் முதலாவது லித்தியம் சுத்திகரிப்பு நிலையமானது குஜராத்தில் அமைக்கப்பட உள்ளது.
- சுத்திகரிப்பிற்கான லித்தியம் ஆனது ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது.
- மணிக்கரன் ஆற்றல் நிறுவனமானது இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்காக ரூ.1000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.
- இந்தியாவின் 3வது மிகப்பெரிய ஆற்றல் வர்த்தக நிறுவனம் மணிக்கரன் ஆகும்.
- அரிய வகைத் தனிமமான லித்தியம் ஆனது இந்தியாவில் காணப் படுவதில்லை.
- சமீபத்தில் இந்தியாவானது பொலிவியா நாட்டின் லித்தியத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றது.
- பொலிவியா ஆனது உலக லித்தியம் இருப்பில் 4ல் 1 பகுதியைக் கொண்டுள்ளது.
- சீனாவானது உலக லித்தியத்தில் 51% பங்கையும் 62% கோபால்ட்டையும் கொண்டு இருக்கின்றது.
- இந்த 2 தனிமங்கள் லித்தியம்-அயனி மின்கலன்களில் ஒரு முக்கியப் பொருட்களாக உள்ளன.
- இந்தியாவில் எதிர்கால லித்தியத் தேவையானது மின்சாரப் போக்குவரத்து மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சேமிப்பு ஆகியவற்றினால் வழி நடத்தப் படுகின்றது.
Post Views:
623