TNPSC Thervupettagam

வங்கியாளர்களின் புத்தகங்கள் சாட்சிய மசோதா 2026

August 10 , 2026 4 days 81 0
  • 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று மக்களவையில் வங்கியாளர்களின் புத்தகங்கள் சாட்சிய மசோதா, 2026 ஆனது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
  • காலனித்துவ காலத்தில் இயற்றப்பட்ட 1891 ஆம் ஆண்டின் வங்கியாளர்களின் புத்தகங்கள் சாட்சிய சட்டத்திற்குப் பதிலாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
  • பேரேடுகள், ரொக்கப் புத்தகங்கள் மற்றும் கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்ட வங்கிப் பதிவுகளின் சான்றளிக்கப்பட்ட நகல்களை சட்ட நடவடிக்கைகளில் சாட்சியமாகப் பயன்படுத்த தற்போதைய சட்டம் அனுமதிக்கிறது.
  • நவீன வங்கி நடைமுறைகள் மற்றும் மின்னணுப் பதிவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த மசோதா சட்ட கட்டமைப்பைப் புதுப்பிக்கிறது.
  • நீதிமன்றங்கள் மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளில் வங்கிப் பதிவுகளை சாட்சியமாகப் பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ கட்டமைப்பை இது வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்