TNPSC Thervupettagam

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் இணையவெளிப் பாதுகாப்பு குழுமத்தில் இணைந்த முதல் ஆசிய நாடு

May 14 , 2022 1087 days 484 0
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கூட்டுறவு இணையவெளிப் பாதுகாப்புச் சிறப்பு மையத்தில் இணைந்த முதல் ஆசிய நாடாக தென் கொரியா மாறியுள்ளது.
  • தென் கொரியாவின் தேசியப் புலனாய்வுச் சேவை அமைப்பானது இந்த மையத்தில் பங்காற்றும் பங்கேற்பு நாடாக இணைந்துள்ளது.
  • இப்போது, ​​இந்த மையமானது அதன் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக 32 நாடுகளைக் கொண்டுள்ளது.
  • இதில் 27 வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் உறுப்பினர் நாடுகள் மற்றும் 5 ஐந்து வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பினைச் சாராத நாடுகள் பங்கேற்பு நாடுகளாக உள்ளன.
  • தென் கொரியா  உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான வருடாந்திர சர்வதேச நேரடி தீவிர இணையவெளிப் பாதுகாப்புப் பயிற்சியான 2022 ஆம் ஆண்டு லாக்ட் ஷீல்ட்ஸ் பயிற்சியில் பங்கேற்றுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் தென் கொரியா இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்