TNPSC Thervupettagam

வட்டி நிதியுதவித் திருத்தம்

February 24 , 2020 1900 days 541 0
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது சமீபத்தில் வட்டிக் குறைப்பு விகிதங்களை ஆண்டுக்கு 2% முதல் 2.5% வரை திருத்த ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது பால் பதனிடுதல் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (DIDF – Dairy Processing and Infrastructure Development Fund) கீழ் நடத்தப்பட்டுள்ளது.
  • DIDF என்பதின் கீழ், 2030 வரை இந்திய அரசாங்கம் நபார்டுக்கு (NABARD) 2.5% வரை வட்டியை வழங்கும்.
  • இது கடன் வாங்குவதற்கான தனது சொந்தத் திட்டமுறையை உருவாக்க நபார்டுக்கு உதவ இருக்கின்றது.
  • இதனால் பால் தொழிற் சங்கங்களுக்கு குறைந்த செலவில் நிதி வழங்க இயலும்.

டி.ஐ.டி.எப். திட்டம் (DIDF)

  • ‘DIDF திட்டம் 2017-18’க்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.
  • இத்திட்டம் கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத் துறையால் (DADF – Department of Animal Husbandary, Dairying and Fisheries) செயல்படுத்தப்படுகிறது.
  • இத்திட்டத்தின் கீழ், நபார்டு ஒரு கணிசமான தொகையை
    • தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியம்  மற்றும்
    • தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்திற்கு அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்