TNPSC Thervupettagam

வணிகம் 20 நிகழ்வின் தொடக்க விழா

January 29 , 2023 929 days 422 0
  • வணிகம் 20 நிகழ்வின் தொடக்கக் கூட்டமானது குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் தொடங்கியது.
  • இது G20 மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.
  • இந்தக் கூட்டத்திற்கு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
  • B20 இந்தியா 2023 என்ற பேச்சுவார்த்தையானது, ‘RAISE’ என்ற கருத்துருவின் கீழ் நடைபெறுகிறது.
  • பொறுப்பு மிக்க, துரிதப்படுத்தப்பட்ட, புதுமைமிக்க, நிலையான மற்றும் சமமான வணிகம் என்பதன் சுருக்கமே RAISE என்பதாகும்.
  • இந்தக் கூட்டத்தில் G20 நாடுகளின் பிரதிநிதிகள், வணிகப் பிரதிநிதிகள், தலைமை நிர்வாக அதிகாரி, இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  • முதல் முறையாக, இந்தச் சந்திப்பில் ஆப்பிரிக்க நாட்டிற்கானச் சிறப்புப் பணிக்குழு இடம் பெற்றுள்ளது.
  • இந்தியாவின் G20 பிரதிநிதி நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் ஆவார்.
  • பருவநிலை இலக்குகளை அடைவதில் சிறப்பாக செயல்படும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இடம் பெற்றுள்ளதோடு, இந்த இடத்தைப் பெற்ற ஒரே G20 அமைப்பு சார்ந்த நாடும் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்