இந்தியப் பத்திரப் பரிமாற்ற வாரியமானது 2021 ஆம் ஆண்டில் வணிகப் பொறுப்பு மற்றும் நிலைத்தன்மை அறிக்கையினை அறிமுகம் செய்தது.
இந்த அறிக்கையானது வணிகப் பொறுப்பு அறிக்கைக்கு மாற்றாக அமையும்.
இந்த அறிக்கையானது நிறுவனங்கள் மற்றும் பல துறைகளில் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை சார்ந்த இலக்குகளை ஒப்பிடுவதற்கான அடித்தளத்தினை வழங்கும் ஒரு தரப்படுத்தப் பட்ட அறிக்கை வடிவமாகும்.
இந்த அறிக்கையானது, பொறுப்புமிக்க வணிக நடத்தை மீதான தேசிய வழி காட்டுதல்களின் 9 கொள்கைகள் தொடர்பான தங்களது செயல்திறன்களை வெளிப் படுத்துமாறு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கோருகிறது.