வரையறுக்கப்பட்ட (தரப்படுத்தப்பட்ட) போக்குவரத்து வாகன அளவுகள்
August 6 , 2020 1836 days 640 0
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமானது மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் மோட்டார் வாகனங்களின் அளவுகள் தொடர்பான விதி – 93 ஐத் திருத்துவதற்கான ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தத் திருத்தங்களானவை ஐரோப்பாவிற்கான சர்வதேச ஐக்கிய நாடுகள் பொருளாதார ஆணையமானது (UNECE - United Nations Economic Commission for Europe) தரங்களின் வரிசையில் மோட்டார் வாகனங்களின் அளவுத் தரங்களை அளிக்க இருக்கின்றது.
இது நாட்டில் தளவாடத் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும். இந்த மேம்படுத்தப்பட்ட அளவுகள் குறிப்பிட்ட எடைக்குள் கூடுதல் பயணிகள் அல்லது கூடுதலாக ஏற்றிச் செல்லக் கூடிய திறன்களை அளிக்க இருக்கின்றது.