TNPSC Thervupettagam

வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா, 2019

December 24 , 2021 1341 days 615 0
  • இந்த மசோதாவானது சமீபத்தில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதாவானது தேசிய வாடகைத் தாய் வாரியம் மற்றும் மாநில வாடகைத் தாய் வாரியங்களை அமைப்பதையும் வாடகைத் தாய் முறை மற்றும் அதன் செயல் முறையை ஒழுங்குபடுத்துவதற்குமான அதிகாரிகளை நியமிக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சட்டப்பூர்வமாக திருமணமாகி குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவடைந்த இந்தியத் தம்பதிகள் மட்டுமே வாடகைத் தாய் முறையைத் தேர்வு செய்ய அனுமதிக்கப் படுவர் என இந்த மசோதா கூறுகிறது.
  • இந்த மசோதாவானது பெண் மற்றும் ஆண் முறையே 23 முதல் 50 வயது மற்றும் 26 முதல் 55 வயதிற்கு உட்பட்ட வகையில், திருமணமான, குழந்தையில்லாத இந்தியத் தம்பதியினருக்கு நெறிமுறைகளுடன் கூடிய முறையான வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்