TNPSC Thervupettagam

வாயேஜர் 1 இன்டர்ஸ்டெல்லார் திட்டம்

January 23 , 2026 8 hrs 0 min 24 0
  • நாசாவின் வாயேஜர் 1 விண்கலம் பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • வாயேஜர் 1 ஆனது 1977 ஆம் ஆண்டில் தேசிய வானியக்கவியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பினால் (NASA) ஏவப்பட்டது.
  • 2012 ஆம் ஆண்டில் ஒளிச்செறிவு இடை மண்டலத்தினை (சூரியனின் தாக்க எல்லை) தாண்டிய பிறகு, விண்மீன்களுக்கு இடையேயான விண்வெளியில் நுழைந்த முதல் விண்கலம் இதுவாகும்.
  • ஒரு ஒளி நாள் என்றால் ரேடியோ சமிக்ஞைகள் பூமிக்கும் வாயேஜர் 1 கலத்திற்கும் இடையில் ஒரு பாதையில் பயணிக்க 24 மணிநேரம் ஆகும்.
  • வாயேஜர் 1 பூமியிலிருந்து சுமார் 16 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள மனிதனால் உருவாக்கப் பட்ட மிக தொலைதூரப் பொருள் ஆகும்.
  • விண்கலத்தில் அண்டக் கதிர்கள், காந்தப் புலங்கள் மற்றும் பிளாஸ்மா அலைகளை ஆய்வு செய்ய இன்னும் நான்கு செயலில் உள்ள கருவிகள் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்