மத்திய அரசானது விமானம் மற்றும் கடல்சார் இணைப்பு விதிமுறைகள் 2018-ஐ அறிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்குள் விமான மற்றும் கடல் பயணங்களின் போது தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதள வசதியை இது அனுமதிக்கின்றது.
இந்தியாவில் செயல்படும் எந்தவொரு இந்திய அல்லது வெளிநாட்டு கப்பல் மற்றும் விமான சேவை நிறுவனங்களானது முறையான உரிமம் வைத்துள்ள ஏதேனும் ஒரு இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் கூட்டு சேர்வதன் மூலம் விமானப் பயணம் மற்றும் கடல் பயணத்தின் போது குரல் மற்றும் தரவு சேவைகளை அந்நிறுவனங்களால் வழங்க முடியும்.
விமானப் பயணம் மற்றும் கடல்சார் இணைப்பானது (In-Flight and Maritime Connectivity - IFMC) தொலைத் தொடர்பு சேவைக்காக தரைதளத்தில் உள்ள கட்டமைப்புகள் மற்றும் செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி அச்சேவையினை வழங்க முடியும்.
இந்தியாவில் உள்ள முறையான தொலைத் தொடர்பு உரிமம் பெற்ற நிறுவனத்தால் விண்வெளித் துறையின் அனுமதியைப் பெற்றுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களின் மூலமாக இந்த சேவையை அந்நிறுவனம் வழங்க முடியும்.
செல்லிடப்பேசியின் அலைவரிசையுடனான தலையீடுகளைத் தவிர்ப்பதற்காக விமானமானது இந்திய வான்வெளியில் 3000 மீட்டர் உயரத்தை அடைந்தவுடன் இந்த சேவைகள் செயல்படுத்தப்படும்.