TNPSC Thervupettagam

விரைவாகப் பரவிய செயலி

April 17 , 2020 1947 days 730 0
  • குறைவான காலத்தில் 50 மில்லியன் பதிவிறக்கங்களைக் கண்ட உலகின் முதலாவது கைபேசிச் செயலியாக “ஆராக்கிய சேது” என்ற செயலி உருவெடுத்துள்ளது என்று நிதி ஆயோக் அறிவித்துள்ளது.
  • இதன் மூலம், கூகுள் பிளேயில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட நின்டென்டோவின் புகழ்பெற்ற “போக்கிமேன் கோ” என்ற செயலியின் சாதனையை இது முறியடித்துள்ளது.
  • இந்தச் செயலியானது நோய்த் தொற்றினால் இருப்பவர்களுடன் (தடம் தொடர்பினை அறிதல்) தொடர்பில் இருப்பவர்களைக் கண்டறியப் பயன்படுத்தப் படுகின்றது.
  • இந்தச் செயலியானது இந்திய அரசின்  மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசியத் தகவலியல் மையத்தால் உருவாக்கப் பட்ட கோவிட் – 19 நோய்த் தொற்றைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு செயலி ஆகும்.
  • சிங்கப்பூர் அரசானது இதே போன்று ஒரு செயலியான “டிரேஸ் டுகேதர்” என்ற ஒரு செயலியைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்