TNPSC Thervupettagam

விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (AIDC)

February 10 , 2021 1618 days 670 0
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 ஆம் ஆண்டிற்கான  தனது மத்திய நிதிநிலை அறிக்கையில் AIDC (Agricultural infrastructure and development cess) என்ற ஒரு வரியை விதிக்க முன்மொழிந்து உள்ளார்.
  • செஸ் எனப்படும் இந்த வரியானது அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை, எனவே இது பொருளுக்குப் பொருள் மாறுபடும்.
  • இது பெட்ரோல் மீது 1 லிட்டருக்கு ரூ.2.5 மற்றும் டீசல் மீது 1 லிட்டருக்கு ரூ.4 என அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இதன் விளைவாக தர அடையாளம் செய்யப்படாத பெட்ரோல் மற்றும் டீசல் முறையே ஒரு லிட்டருக்கு ரூ .1.4 மற்றும் ரூ .1.8 என்ற கலால் வரி (உற்பத்தி வரி) விதிக்கப் பெறும்.
  • மேலும் தர அடையாளம் செய்யப்படாத பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED - Special Additional Excise Duty) முறையே லிட்டருக்கு ரூ .11 மற்றும் ரூ .8 என்ற அளவில் இருக்கும்.
  • கலப்பு எரிபொருட்களுக்கு (Blended fuel) செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • இதில் எம் - 15 பெட்ரோல் மற்றும் இ - 20 பெட்ரோல் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்