TNPSC Thervupettagam

வெகுஜன ஊடக ஒத்துழைப்பு மீதான சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

June 5 , 2021 1522 days 573 0
  • சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shangai Cooperation Organisation – SCO) அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் இடையிலான வெகுஜன ஊடக ஒத்துழைப்பு மீதான ஒரு ஒப்பந்தத்திற்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது இந்தியா, சீனா, கிர்கிஸ்தான் குடியரசு, கசகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், ரஷ்யா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
  • இந்த ஒப்பந்தமானது,
    • வெகுஜன ஊடகத் துறையின் சிறந்த நடைமுறைகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உறுப்பினர் நாடுகள் பகிர்ந்து கொள்ளவும்,
    • வெகுஜன ஊடகத் துறையின் கூட்டமைப்புகளுக்கு இடையில் சமமான மற்றும் பரஸ்பர ரீதியிலான நன்மையை வழங்கும் ஒத்துழைப்பினை ஊக்குவிக்கவும் உறுப்பினர் நாடுகளுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்