நாட்டின் இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தின் சாகச உணர்வை எடுத்துக் காட்டுவதற்காக தரைப் படையின் சாகசப் பிரிவு ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான பரந்த இந்தியா முழுவதுமான வடக்கு தெற்கு வெப்பக் காற்று பலூன் பயணத்தை துவக்கி வைத்திருக்கின்றது.
தேசிய ஒற்றுமைக்காகவும் நாட்டிற்காகவும் மேம்பட்ட தியாகங்கள் புரிந்த ராணுவ வீரர்களுக்காக இந்த ஜெய் பாரத் பயணத்தை ராணுவம் அர்ப்பணித்திருக்கின்றது.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ராணுவம் நாடு முழுவதும் 31 நிலையங்களையும் சென்றடையும்படியாக இரண்டு பலூன்களை பறக்க விடும்.