அண்மையில், கர்நாடக உயர்நீதிமன்றமானது வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் கீழ் உள்ள மாணவர்கள் தொழில்முறைப் படிப்புகளில் சேருவதற்கு வேண்டி அவர்களை “இந்தியக் குடிமக்கள்” எனக் கருத வேண்டும் என்று கூறியுள்ளது.
1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்து ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் குடியுரிமை’ (OCI - Overseas Citizenship of India) என்ற திட்டத்தை 2005 ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
2015 ஆம் ஆண்டு 09 ஜனவரி அன்று, இந்திய வம்சாவளியினர் அட்டை (PIO - Persons of Indian Origin) வழங்குவதை நிறுத்தி விட்டு அதனை OCI அட்டையுடன் இந்திய அரசு இணைத்து விட்டது.