வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 80வது ஆண்டு நிறைவு விழா
August 9 , 2022 1073 days 718 0
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் தேதியன்று ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்’ 80வது ஆண்டு நிறைவினை இந்தியா கொண்டாடியது.
இந்த இயக்கம் ஆனது ஆகஸ்ட் கிராந்தி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில், 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் தேதியன்று காந்தியடிகளால் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கான அழைப்பானது விடுக்கப்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் குழுவின் மும்பை மாநாட்டில் இந்த இயக்கம் ஆனது தொடங்கப் பட்டது.
மும்பையில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் (குவாலியா டேங்க் மைதானம்) ஆற்றிய உரையில் மகாத்மா காந்தி அவர்கள் “சுதந்திரத்திற்காக செய் அல்லது செத்து மடி” என்ற முழக்கத்தினை விடுத்தார்.
கிரிப்ஸ் தூதுக் குழுவின் தோல்வியே வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கான ஒரு உடனடிக் காரணமாகும்.