ஸ்டார்ட்அப் இந்தியா (புதிதாகத் தொழில் தொடங்குதல்) இணையதளத்தின் படி, இதுவரை 29,681 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையிடம் (Department for Promotion of Industry and Internal Trade - DPIIT) பதிவு செய்துள்ளன.
இது 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை (8,939) விட மூன்று மடங்கு அதிகமாகும்.
இந்தத் தரவானது மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் தருவிக்கப் பட்டது.
தற்போது இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிலையானது அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகளவில் மூன்றாவது பெரிய இடத்தில் உள்ளது.
DPIIT
DPIIT ஆனது 1995 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
இது தொழில்துறை வளர்ச்சித் துறையுடன் இணைக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டில் மறுசீரமைக்கப் பட்டுள்ளது.
DPIIT ஆனது தேசிய முன்னுரிமைகள் மற்றும் சமூகப் பொருளாதார நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, தொழில்துறை துறையின் வளர்ச்சிக்காக ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை உருவாக்கி, அவற்றைச் செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.