TNPSC Thervupettagam

ஸ்டேபிள்காயின்கள் மீதான ஒழுங்குமுறை - ஹாங்காங்

August 9 , 2025 12 days 37 0
  • ஃபியட் நாணயத்துடன் இணைக்கப்பட்ட ஸ்டேபிள்காயின்களுக்கு (நிலையான எண்ணிம நாணயங்கள்-FRS) உரிமம் வழங்கவும், அவற்றை ஒழுங்குமுறைப்படுத்தவும் ஹாங்காங் அரசு ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் ஸ்டேபிள்காயின்கள் அவசரச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
  • சில்லறை முதலீட்டாளர்களுக்கு உரிமம் பெறாத ஸ்டேபிள்காயின்களை வழங்குவது அல்லது சந்தைப்படுத்துவது தற்போது புதிய சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானதாக அறிவிக்கப்படுகிறது.
  • நிறுவனங்கள் ஹாங்காங் நாணயவியல் ஆணையத்திடம் (HKMA) உரிமம் பெற வேண்டும் மற்றும் சொத்து இருப்பு, தணிக்கைகள் மற்றும் பணமோசடித் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கடுமையான விதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • ஸ்டேபிள்காயின்கள் என்பது அவற்றின் மதிப்பை ஒப்பீட்டளவில் நிலையானதாக வைத்திருக்க ஃபியட் நாணயங்கள் அல்லது பொருட்களுடன் இணைக்கப்பட்ட இணைய சங்கேத (கிரிப்டோ) சொத்துக்கள் ஆகும்.
  • உலகளவில், 250 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஸ்டேபிள்காயின்கள் புழக்கத்தில் உள்ளன, அவை வர்த்தகம், பணம் அனுப்புதல் மற்றும் நிலையற்றப் பொருளாதாரங்களில் சேமிப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
  • அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற சில நாடுகள் ஸ்டேபிள்காயின் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்