ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்கள் 'ஹர் கர் ஜல்' (Har Ghar Jal) சான்றிதழ் பெற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்குவதற்காக 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப் பட்டது.
இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து குழாய் மூலம் குடிநீர் இணைப்பு பெற்ற கிராமப்புற வீடுகளின் எண்ணிக்கை 3.23 கோடியில் இருந்து 15.91 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 12.68 கோடிக்கும் அதிகமான கூடுதல் கிராமப்புற வீடுகள் குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளைப் பெற்றுள்ளன.
ஜல் சக்தி அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட போது 16.7% ஆக இருந்த இதன் பரவல் தற்போதுள்ள நிலைக்கு அதிகரித்துள்ளது.