ஹிரோஷிமா இடிபாடுகளில் புதிய உலோகக் கலவை கண்டுபிடிப்பு
August 5 , 2026 5 days 65 0
1945 அணுபடிகுண்டு வெடிப்புக்குப் பிறகு உருவான, ஜப்பானின் ஹிரோஷிமா விரிகுடாவிலிருந்து மீட்கப்பட்ட கண்ணாடி போன்ற ஹிரோஷிமைட்டுகளுக்குள் முன்பு அறியப்படாத ஒரு புதிய உலோகக் கலவையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த உலோகக் கலவையானது மணிகளுக்குள் ஒரு சிறிய உலோக தானியமாக காணப் படுகிறது. இதில் இரும்பு, குரோமியம், நிக்கல், மாங்கனீசு, மாலிப்டினம், சிலிக்கான் மற்றும் அலுமினியம் ஆகியவை உள்ளன.
அணுவெடிப்பின் அதீத வெப்பம் மற்றும் விரைவான குளிர்ச்சி ஆகியவை ஒரு தனித்துவமான கட்டமைப்பை உருவாக்கியதன் காரணமாக இது உருவாகி இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.
இந்த உலோகக் கலவையானது, வலிமை மற்றும் நிலைத்தன்மைக்காக ஆய்வு செய்யப் படும் உயர்-எண்ட்ரோபி உலோகக் கலவைகள் (HEAs) மற்றும் குவாசி கிரிஸ்டல் /படிகங்களின் (quasicrystals) அம்சங்களை ஒத்திருக்கிறது.
அணுக்கரு வெடிப்பின் துகள்கள், தீவிரமான இயற்பியல் மற்றும் வேதியியல் நிலைமைகள் குறித்த தகவல்களைப் பாதுகாக்க முடியும் என்பதை இந்தக் கண்டுபிடிப்பு காட்டுகிறது.