இந்த அறிக்கை இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.20 லட்சம் என்ற அளவில் சராசரி சேமிப்பினைக் கொண்ட ‘புதிய நடுத்தர வர்க்கம்' என்ற ஒரு புதிய குடும்ப வகையை அடையாளம் கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 4.12 லட்சம் என்ற அளவிற்கு லட்சாதிபதிக் குடும்பங்கள் (டாலர் மதிப்பில் ) உள்ளன.
4,593 என்ற நிலையில், மிக அதிக நிகர சொத்து மதிப்புள்ள தனிநபர்கள் எனும் பிரிவில் உலகளவில் ஐக்கிய அமெரிக்க நாடுகள், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
மொத்த லட்சாதிபதிக் குடும்பங்களில் 46 சதவீதத்தினர் மகாராஷ்டிரா (56,000), உத்தரப் பிரதேசம் (36,000), தமிழ்நாடு (35,000), கர்நாடகா (33,000), குஜராத் (29,000) ஆகிய மாநிலங்களில் வசிக்கின்றனர்.
நகர வாரியாக, மும்பையில் அதிக லட்சாதிபதிகள் (16,933) உள்ளனர். அதனையடுத்து, டெல்லி (16,000), கொல்கத்தா (10,000), பெங்களூரு (7,582) மற்றும் சென்னை (4,685) ஆகிய நகரங்கள் உள்ளன.