TNPSC Thervupettagam

ஹெரா சிறுகோள் ஆய்வு திட்டம்

November 24 , 2026 2 days 62 0
  • நாசாவின் இரட்டைச் சிறுகோள் திசைதிருப்பல் சோதனையின் (DART) மோதல் இடத்தை ஆய்வு செய்வதற்காக, ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) ஹெரா (Hera) விண்கலம் 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டிடிமோஸ் (Didymos) இரட்டைச் சிறுகோள் அமைப்பைச் சென்றடைந்தது.
  • 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று நாசாவின் DART விண்கலத்தால் மோதப்பட்ட சிறிய சிறுகோளான டிமார்போஸை (Dimorphos) ஹெரா ஆய்வு செய்யும்.
  • DART திட்டமானது டிடிமோஸைச் சுற்றியுள்ள டிமார்போஸின் சுற்றுப்பாதையை 33 நிமிடங்கள் மாற்றியமைத்து, சிறுகோளைத் திசைதிருப்பும் இயக்க ஆற்றல் மோதல் (Kinetic-impact) முறையை நிரூபித்தது.
  • டிமார்போஸின் நிறையை அளவிடுதல், அதன் மேற்பரப்பை வரைபடமாக்குதல் மற்றும் அதன் உள் கட்டமைப்பை ஆய்வு செய்தல் ஆகியவற்றை ஹெரா மேற் கொள்ளும்.
  • மேற்பரப்புக் கட்டமைப்பு மற்றும் உள் கட்டமைப்பை ஆய்வு செய்வதற்காக இத்திட்டம் மிலானி (Milani) மற்றும் ஜுவென்டாஸ் (Juventas) ஆகிய இரண்டு கியூப்சாட்களைப் (CubeSats) பயன்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்