TNPSC Thervupettagam

“எனது உடல் எனது” அறிக்கை

April 18 , 2021 1523 days 739 0
  • சமீபத்தில் ஐ.நா.வின் மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA - United Nations Population Fund) ‘my body is my own’ (எனது உடல் எனது) என தலைப்பிடப்பட்ட 2021 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை நிலவர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • உடல்சார்ந்த சுயஉரிமை மீதான அறிக்கையினை ஐ.நா. வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.
  • 57 வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த பெண்களில் கிட்டத்தட்ட பகுதியளவினருக்கு தங்களது உடல் சார்ந்த முடிவுகளை மேற்கொள்வதற்கு உரிமை இல்லை.
  • இதனுள் கருத்தடை, உடல்நலம் பேணுதல் (அ) அவர்களின் பாலியல் சார்ந்தவை போன்றவையும் உள்ளடங்கும்.
  • 75% நாடுகள் மட்டுமே கருத்தடையை முழுமையாகவும் சமமாகவும் உபயோகிக்க சட்ட ரீதியில் உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்