மத்தியக் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்கள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உருவாக்கப்பட்டு NCERT அமைப்பால் சீரமைக்கப்பட்ட 100க்கும் அதிகமான வரைகதை புத்தகங்களை வெளியிட்டார்.
இப்புத்தகங்களை எந்தவொரு ஆன்டிராய்டு திறன்பேசியிலும் தீக்சா இணையதளம் வாயிலாகவோ (diksha.gov.in) (அ) தீக்சா செயலி மூலமாகவோ அணுக இயலும்.
இந்தப் புத்தகங்களை வாட்ஸ்அப் செயலி மூலம் இயக்கப் படும் ஒரு புதிய சாட்பாட் என்ற உதவியாளர் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சாட்பாட் டிஜிட்டல் மூலமாக கற்றலின் நோக்கத்தை விரிவாக்க ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது.
அப்புத்தகங்களின் வெளியீட்டின் போது CBSEயின் போட்டித்தன்மை அடிப்படையிலான கல்வித் திட்டத்தின் ஓர் அங்கமாக அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கில வகுப்புகளுக்கான CBSE மதிப்பீட்டுக் கட்டமைப்பினையும் கல்வி அமைச்சர் தொடங்கி வைத்தார்.