TNPSC Thervupettagam

100வது நினைவு தினம் - திலகர்

August 5 , 2020 2265 days 1922 0
  • லோக்மான்ய பால கங்காதர திலகரின் 100வது நினைவு தினம் ஆகஸ்ட் 01 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • இவர் லால்-பால்-பால் (லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால்) என்ற மூன்று நபர்களில் ஒருவராவார்.
  • இவர் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் “இந்திய அமைதியின்மையின் தந்தை” என்றழைக்கப் படுகின்றார்.
  • ஜவஹர்லால் நேரு இவரை “இந்தியப் புரட்சியின் தந்தை” என்று அழைக்கின்றார்.
  • மகாத்மா காந்தி இவரை “நவீன இந்தியாவை உருவாக்குபவர்” என்று கூறியுள்ளார்.
  • இவர் “பூர்ண சுயராஜ்ஜியம்” அல்லது “முழுமையான தன்னாட்சி” என்ற கருத்தின்  வலுவான ஆதரவாளராக விளங்கினார்.
  • இவரது புகழ்பெற்ற முழக்கம் “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்