TNPSC Thervupettagam

11-வது NPT மறுஆய்வு மாநாடு

May 28 , 2026 2 days 52 0
  • அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) ஈடுபட்டுள்ள நாடுகளின் 11-வது மறுஆய்வு மாநாடானது, 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் நியூயார்க் நகரில் இறுதி முடிவு ஆவணம் குறித்து எந்தவொரு ஒருமித்த கருத்தும் எட்டப்படாமலேயே நிறைவடைந்தது.
  • அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) என்பது அணு ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பது, அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது மற்றும் அணு ஆயுதக் குறைப்புக்கு ஆதரவளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகளாவிய அணு ஆயுதப் பரவல் தடை முறை மற்றும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பின் அடித்தளமாக NPT விளங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்து உள்ளது.
  • உக்ரைனுடன் தொடர்புடைய ரஷ்யாவின் அணுசக்தி அச்சுறுத்தல்கள், வட கொரியாவின் (DPRK) அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டம் மற்றும் சீனாவின் அதி வேக அணு ஆயுதப் பெருக்கம் ஆகியவை இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய கவலைகளாகும்.
  • இம்மாநாடு உறுப்பு நாடுகளின் ஒப்பந்தக் கடமைகளை மறு ஆய்வு செய்வதில் வலுவான வெளிப்படைத்தன்மை நடவடிக்கைகள் மற்றும் மேம்பாடுகளுக்கு ஆதரவளித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்