வருடாந்திர இந்திய-ஜப்பானிய இருதரப்பு உச்சிமாநாடானது அக்டோபர் 2018-ல் 28-29 தேதிகளில் ஜப்பானில் நடைபெற்றது.
இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் ஜப்பான் சென்றார்.
முக்கிய முடிவுகள்
இரு நாடுகளும் 75 மில்லியன் டாலர் மதிப்புள்ள நாணய மாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் இடையே 2 + 2 பேச்சுவார்த்தை மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இரு நாடுகளும் யோகா மற்றும் ஆயுர்வேதா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைமைகளில் முதன்முறையாக ஒத்துழைக்க ஒப்புக் கொண்டிருக்கின்றன.
ஜப்பான் சர்வதேச சூரிய ஒளிசக்தி கூட்டிணைவில் (ISA – International Solar Alliance) இணைவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ISA கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் 71வது நாடாகவும் 48வது உறுதிப்படுத்தும் நாடாகவும் ஜப்பான் இருக்கும்.