இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆனது, வடகிழக்கு இந்தியாவில் அறிவியலுக்கே புதிதான 13 புதிய நீர்நில வாழ்வன (இருவாழ்விகள்) இனங்களைப் பதிவு செய்தது.
கழுகுக்கூடு புதர் தவளை, அருணாச்சல புதர் தவளை, மலைத் தவளை, திபாங் பள்ளத்தாக்கு புதர் தவளை, கூர் மூக்கு புதர் தவளை, கிழக்கு புதர் தவளை ஆகிய ஆறு இனங்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டன.
நர்பு புதர் தவளை, மாசின்ரம் புதர் தவளை, பௌலஞ்சர் புதர் தவளை ஆகியவை மேகாலயாவில் பதிவு செய்யப்பட்ட மூன்று இனங்கள் ஆகும்.
ஒன்று நாகாலாந்தின் கோனோமா கிராமத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினால் பாதுகாக்கப்பட்ட காட்டில் கண்டறியப்பட்டதுடன், ஏழு இனங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கண்டறியப்பட்டன.