TNPSC Thervupettagam

13 புதிய நீர்நில வாழ்வன இனங்கள் கண்டுபிடிப்பு

December 6 , 2025 19 days 92 0
  • இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆனது, வடகிழக்கு இந்தியாவில் அறிவியலுக்கே புதிதான 13 புதிய நீர்நில வாழ்வன (இருவாழ்விகள்) இனங்களைப் பதிவு செய்தது.
  • கழுகுக்கூடு புதர் தவளை, அருணாச்சல புதர் தவளை, மலைத் தவளை, திபாங் பள்ளத்தாக்கு புதர் தவளை, கூர் மூக்கு புதர் தவளை, கிழக்கு புதர் தவளை ஆகிய ஆறு இனங்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டன.
  • நர்பு புதர் தவளை, மாசின்ரம் புதர் தவளை, பௌலஞ்சர் புதர் தவளை ஆகியவை மேகாலயாவில் பதிவு செய்யப்பட்ட மூன்று இனங்கள் ஆகும்.
  • மேலும் பராக் பள்ளத்தாக்குப் புதர் தவளை (அசாம்) , வில்லோங்-குல்லன் புதர் தவளை (மணிப்பூர்), லாங்ட்லாய் புதர் தவளை (மிசோரம்), கோனோமா புதர் தவளை (நாகாலாந்து) ஆகியவையும் கண்டறியப்பட்டன.
  • ஒன்று நாகாலாந்தின் கோனோமா கிராமத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினால் பாதுகாக்கப்பட்ட காட்டில் கண்டறியப்பட்டதுடன், ஏழு இனங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கண்டறியப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்