ஆத்ம நிர்பர் வாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பாதுகாப்புத் துறை, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஆயுதத் தொழிற்சாலை வாரியம் ஆகியவற்றின் 15 உற்பத்திப் பொருட்களை வெளியிட்டு உள்ளார்.
நாக் ஏவுகணையை எடுத்துச் செல்லும் வாகனம் (Nag Missile Carrier) : ஏறத்தாழ ரூ.260 கோடி மதிப்புள்ள இறக்குமதி செய்யப்படும் பொருளுக்கு மாற்றாக இது செயல்பட இருக்கின்றது.
14.5 மி.மீ அளவு கொண்ட பொருள் எதிர்ப்பு ரைபிள் (14.5 mm Anti Material Rifle) : இது திருச்சிராப்பள்ளியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஒரு ரைபிள் ஆகும்.
வெப்பப் பிம்ப மற்றும் பகல் நேரப் பார்வை கொண்ட டி90 முக்கியப் போர் பீரங்கிகள் (Thermal Imager Cum Day Sight for T90 Main Battle Tank) : இது மேற்கு வங்கத்தின் இஷாபூரில் உள்ள ரைபிள் தொழிற்சாலையினால் தயாரிக்கப்பட்ட ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.
8.6 x 70 மி.மீ. துப்பாக்கியின் முன்மாதிரி (Prototype of 8.6×70 mm Sniper) : இது தொலைதூர இலக்குகளைக் குறி வைத்துத் தாக்குவதற்காக இஷாபூரில் உள்ள ரைபிள் தொழிற்சாலையினால் வடிவமைக்கப்பட்டதாகும்.
150 டன் எடை கொண்ட பாரா வண்டி வாகனம் (150 Ton payload capacity Dump Truck) : இது மிகப்பெரிய மின் சுரங்கச் சரக்கு வண்டிகளில் ஒன்றாக விளங்குகின்றது.
180 டன் எடை கொண்ட மிகப்பெரிய சுரங்க அகழ் எந்திரம் (Super Giant Mining Excavator of 180 Ton Capacity) : இதன் மூலம் அந்நியச் செலாவணி ரூ.220 கோடி மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
GAUR : இது 85% உள்நாட்டுப் பொருட்களுடனும் உயர்பாதுகாப்பு நிலையின் வழக்கமான அம்சங்களுடனும் உயர் இயக்க அடிப்பீடத்தின் மீது கட்டப்பட்ட ஒரு நடுத்தர குண்டு துளைக்காத வாகனமாகும்.
ஹெலிபோர்ட்டபிள் 100 எச்பி டோசர் (Heliportable 100 HP Dozer) : இது அதிக அளவிலான 94% உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டுள்ளது.
150வது DO – 228 விமானம் (150th Do-228 aircraft) : ஐஎன்-259 என்று அழைக்கப்படும் இது கடல்சார் உளவு மற்றும் போர்ப் பணியில் பணியாற்றும் இந்தியக் கடற்படைக்கான ஒரு பிரத்தியேகத் தளமாகும்.
1 கிலோ வாட் மாற்றிக் கொடுக்கும் வான்வழி மாற்ற உலோகச் சட்டம் (1kW Transmitter Aerial Switching Rack) : இது போலியற்ற உள்நாட்டுப் பொருட்களைக் கொண்ட இந்தியக் கடற்படைக்காக ஒரு நீண்ட கால உதவி அளிப்பதாகும்.
நேரியல் மாறுபடுகிற தனிப்பட்ட ஆற்றல் மாற்றி (Linear Variable Differential Transducer) : இது இலக்கை அடைவதில் மற்றும் வழிகாட்டுவதில் துல்லியத் தன்மை மற்றும் விரைவுத் தன்மையை அடைவதற்குப் பயன்படுத்தப் படுகின்றது.
கொன்கூர்ஸ் ஏவிகணைச் சோதனை உபகரணம் மற்றும் கொன்கூர்ஸ் ஏவுகணை ஏவு அமைப்புச் சோதனை உபகரணங்கள் (Konkurs Missile Test Equipment & Konkurs Launchers Test Equipment): இது இதற்கு முன்பு இரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அமைப்பிற்கு மாற்றாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
சிறிய ரக பாதசாரி (தாக்குதல்) பாலம் (Portable Pedestrian (Assault) Bridge) : இது இந்திய இராணுவத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இதே வகையைச் சேர்ந்த அளவில் முதலாவது வகையாக கார்பன் இழை பாலிமர் கலப்புப் பொருட்களினால் உருவாக்கப் பட்டதாகும்.
பல்லிணைப் பெட்டி (கியர் பாக்ஸ்) : இது ICGயின் OPV திட்டத்திற்காக மேம்படுத்தப் பட்டுள்ளது.
நீருக்கடியில் தொலைதூரத்திலிருந்து செயல்படுத்தப்படும் வாகனம் (Underwater Remote Operated Vehicle) : இது சென்னையில் தனது வெளிப்புற மதிப்பீட்டுச் சோதனையைத் தொடங்கியுள்ளது.