16வது பிரவசி பாரதிய திவாஸ் (PBD)
January 12 , 2021
1618 days
798
- இது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 09 அன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தினால் ஒருங்கிணைக்கப் பட்டது.
- இந்த ஆண்டில் இதற்கான கருத்துரு, ”சுய சார்பு இந்தியாவிற்குப் பங்களித்தல்” என்பது ஆகும்.
- இந்த நிகழ்வானது தலைமை விருந்தினரான சுரினாமின் அதிபரான சந்திரிகா பிரசாத் சந்தோகி என்பவரின் தலைமை உரையையும் உள்ளடக்கியுள்ளது.
- இது இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியச் சமூகத்தின் பங்களிப்பைக் குறிப்பதற்காக ஜனவரி 09 அன்று அனுசரிக்கப்ப டுகின்றது.
- 1915 ஆம் ஆண்டில் இந்த தினத்தன்று காந்தி அவர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பினார்.
- PBD மாநாடுகள் 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப் பட்டன.
- 2015 ஆம் ஆண்டு முதல், PBD ஆனது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படுமாறு இதன் செயல்வடிவத்தில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

Post Views:
798