இந்தியாவானது 18.176 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் மிகப்பெரிய அளவிலான பயிர்கள் இழப்பினைச் சந்தித்து இருக்கின்றது.
இது மொத்த நிகர அளவில் பயிரிடப்பட்ட பகுதியில் 8.5% என்ற அளவில் பாதிக்கப் பட்டுள்ளது.
பயிர்கள் இழப்பானது 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக நிகழ்ந்துள்ளது.
மொத்த இழப்புகளில், ஏறத்தாழ 10.68 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பானது 2019 ஆம் ஆண்டில் மட்டும் பாதிப்படைந்துள்ளது.
இந்தத் தரவின்படி, வெள்ளம் ஏற்படக் கூடிய மாநிலங்களான பீகார், அசாம், உத்தரப் பிரதேசம் ஆகியவை மிகக் கடுமையான வெள்ளத்தைச் சந்தித்துள்ளன.
மிகக் கடுமையான வெள்ளமானது கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிடையே மத்தியப் பிரதேசமானது மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலங்கள் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சுழிய ரீதியிலான அளவிலேயே பயிர்கள் இழப்பைப் பதிவு செய்து இருந்தன.
ஆனால் 2019 ஆம் ஆண்டில் மட்டும் அவை 6.047 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் அதிக இழப்பைச் சந்தித்துள்ளது.