2019-20 ஆம் நிதியாண்டிற்கான தேசியக் குடும்பச் சுகாதார ஆய்வு (NFHS-5)
December 18 , 2020
1615 days
629
- இது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் தொடங்கப் பட்டு உள்ளது.
- இது கடைசியாக வெளியிடப் பட்டு (NFHS-4 2015-16) 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது வெளியிடப் பட்டுள்ளது.
- மொத்தப் பிறப்பு விகிதமானது (Total Fertility Rate - TFR) பெரும்பான்மையான மாநிலங்களில் குறைந்துள்ளது.
- பீகார், மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களைத் தவிர இதர அனைத்து மாநிலங்களும் 2.1 அல்லது அதற்குக் குறைவான TFR விகிதத்தைக் கொண்டுள்ளன.
- இது பெரும்பான்மையான மாநிலங்கள் மாற்று நிலை பிறப்பு விகிதத்தை எட்டி உள்ளதைக் குறிக்கின்றது.
- தற்பொழுது அசாமில் பாலின விகிதமானது பெண்களுக்குச் சாதகமானதாக மாறி உள்ளது.
- 2019-2020 ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1012 பெண்கள் உள்ளனர்.

Post Views:
629