TNPSC Thervupettagam

2021-22 ஆம் ஆண்டிற்கான தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்தியின் முன்கூட்டிய மதிப்பீடுகள்

November 5 , 2022 992 days 423 0
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமானது 2021-22 ஆம் ஆண்டிற்கான பல்வேறு தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்தியின் 3வது முன் கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
  • இந்த மதிப்பீட்டின்படி, இந்தப் பயிர்கள் 28.08 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் 342.33 மில்லியன் டன்கள் அளவிற்கு உற்பத்தி செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் 102.48 மில்லியன் டன்களாக பதிவான பழங்களின் உற்பத்தி 107.24 மில்லியன் டன்னாக உயரும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் 200.45 மில்லியன் டன்களாக இருந்த காய்கறிகளின் உற்பத்தி 204.84 மில்லியன் டன்னாக உயரும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் 26.64 மில்லியன் டன்களாக இருந்த வெங்காய உற்பத்தி 31.27 மில்லியன் டன்களாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2020- 2021 ஆம் ஆண்டில் 56.17 மில்லியன் டன்களாக இருந்த உருளைக்கிழங்கு உற்பத்தி 53.39 மில்லியன் டன்களாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் 21.18 மில்லியன் டன்களாக இருந்த தக்காளி உற்பத்தி 20.33 மில்லியன் டன்களாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்