2021 ஆம் ஆண்டின் குடியரசு தின விருந்தினராக இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சனை இந்தியா அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டால், கடந்த 27 ஆண்டுகளில் ராஜபாதை அணிவகுப்பில் கலந்து கொண்டுச் சிறப்பித்த முதல் பிரிட்டிஷ் பிரதமர் இவராவார்.
1993 ஆம் ஆண்டின் ஜனவரி 26 அன்று இந்த அணிவகுப்பில் பிரதான விருந்தினராக வந்த கடைசி இங்கிலாந்துப் பிரதமர் ஜான் மேஜர் ஆவார்.
அவரது வருகை உறுதி செய்யப் பட்டால், கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியாவுக்கு நேரில் பயணம் செய்யும் முதல் அரசாங்கத் தலைவரும் இவராவார்.
2020 ஆம் ஆண்டின் பிப்ரவரியில் மியான்மர் ஜனாதிபதி வின் மைன்ட் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தந்த கடைசி அரசாங்கத் தலைவர்கள் ஆவர்.