TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை

December 12 , 2021 1351 days 639 0
  • கூகுள் இந்தியா நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான தேடல் போக்குகளை அறிவித்ததோடு இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட சிறந்த தேடல்களையும் அறிவித்துள்ளது.
  • இதன்படி, 2021 ஆம் ஆண்டில் கிரிக்கெட் மற்றும் கோவின் (CoWin) ஆகியவை அதிகம் தேடப் பட்டவை ஆகும்.
  • 2021 ஆம் ஆண்டில் கிரிக்கெட் ஒரு முக்கிய தேடல் போக்காக தொடர்ந்தது.
  • இந்தியன் பிரீமியர் லீக், கோவின் மற்றும் ICC T20 உலகக் கோப்பைப் போன்றவை ஒட்டு மொத்த தேடல் வினவல்களின் பட்டியலில் முதல் மூன்று  இடங்களைப் பிடித்துள்ளன.
  • யூரோ கோப்பை மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போன்றவை முறையே இப்பட்டியலில் 4வது மற்றும் 5வது இடங்களைப் பெற்றுள்ளன.
  • கோவிட் தடுப்பூசி, ஃபிரீ ஃபையர் ரிடீம் கோட், ஆர்யன் கான், நீரஜ் சோப்ரா மற்றும் கோப்பா அமெரிக்கா போன்றவை இப்பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம்பெற்ற மற்ற குறிப்பிடத்தக்கத் தேடல்களாகும்.
  • 2021 ஆம் ஆண்டில் கூகுல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படமானது ஜெய்பீம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்