75வது ஆண்டு - அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதலாவது அமர்வு
December 12 , 2021 1346 days 717 0
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையானது 75 ஆண்டுகளுக்கு முன்பு 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 09 அன்று தனது முதல் அமர்வினை நடத்தியது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வேறுபட்ட பின்னணியிலிருந்தும், வேறு பட்ட சித்தாந்தங்களிலிருந்தும் புகழ்பெற்ற நபர்கள், இந்திய மக்களுக்கு ஒரு தகுதி மிக்க அரசியலமைப்பினை வழங்குவதற்கான ஒரு நோக்கத்துடன் ஒன்றிணைந்தனர்.
அரசியலமைப்பு நிர்ணய சபை என்ற ஒரு கருத்தானது முதன்முதலில் M.N. ராய் என்பவரால் முன்வைக்கப்பட்டது.
இந்தியாவிற்கான அரசியலமைப்பினை நிறுவுவதற்காக ஓர் அரசியலமைப்பு நிர்ணய சபையை அமைப்பதற்காக 1935 ஆம் ஆண்டில் இந்திய தேசியக் காங்கிரஸ் ஒரு அதிகாரப் பூர்வ அழைப்பினை விடுத்தது.
1940 ஆம் ஆண்டின் “ஆகஸ்ட் அறிக்கையின்” மூலம் அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான ஒரு கோரிக்கையானது முதன்முறையாக ஆங்கிலேயர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இறுதியில் அமைச்சரவைத் திட்டத்தின் விதிமுறைகளின் கீழ், ஓர் அரசியலமைப்பு நிர்ணய சபையானது நிறுவப்பட்டது.