TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இணையதளம் மற்றும் கருத்துரு

November 27 , 2022 902 days 388 0
  • 2023 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பினை ஏற்று அடுத்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை நடத்த உள்ளதால் அதற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை இந்தியா அறிமுகப் படுத்தி உள்ளது.
  • அடுத்த ஆண்டு இந்தியாவின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளை இந்த இணையதளம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, "பாதுகாப்பான (SECURE) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு" என்பதாகும்.
  • இதில் குடிமக்களுக்கான பாதுகாப்புக்கு ‘S’, பொருளாதார மேம்பாட்டிற்கு ‘E’, பிராந்தியத்தில் இணைப்பு வசதிக்கு ‘C’, ஒற்றுமைக்கு ‘U’, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ‘R’, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ‘E' ஆகிய எழுத்துக்கள் குறிக்கப் படுகின்றன.
  • உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சுழற்சி முறை தலைமைப் பதவியை இந்தியா பெற்றது.
  • இந்தியா 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஓராண்டு காலத்திற்கு தலைமைப் பதவியினை வகிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்