2026 ஆம் ஆண்டில் நாடு தழுவிய குடும்ப வருமானக் கணக்கெடுப்பு
October 18 , 2025 15 hrs 0 min 11 0
புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) ஆனது 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தேசிய குடும்ப வருமானக் கணக்கெடுப்பை (NHIS) தொடங்க உள்ளது.
NHIS என்பது வீட்டு வருமானத்தை அளவிடுவதற்கும், நீண்ட காலத் தரவு இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் இந்திய அளவிலான கணக்கெடுப்பாகும்.
இந்தக் கணக்கெடுப்பு ஆனது வாழ்க்கைச் சூழல்கள், வருமானம் மற்றும் செலவு முறைகள் பற்றிய தரவை வழங்கி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதாரப் பகுப்பாய்வை ஆதரிக்கும்.