இந்தியாவின் 22வது சட்ட ஆணையமானது இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிபதி (ஓய்வு) ரிதுராஜ் அவஸ்தி அவர்களின் தலைமையில் அமைக்கப் பட்டுள்ளது.
நீதிபதி அவஸ்தி 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று, அதன் பிறகு இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஓய்வு பெற்றார்.
கல்வி நிறுவனங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு விதித்த கட்டுப்பாட்டை உறுதி செய்யும் அமர்விற்கு அவர் தலைமை தாங்கினார்.
இந்திய சட்ட ஆணையம் என்பது இந்திய அரசின் அறிவிப்பின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப் பூர்வமல்லாத அமைப்பாகும்.
சட்ட ஆணையமானது, முதன்முதலில் 1955 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், இந்த ஆணையமானது இதுவரை 277 அறிக்கைகளைச் சமர்ப்பித்து உள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி B.S. சவுகான் தலைமையிலான 21வது சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று முடிவடைந்தது.