இந்தியாவின் 22வது சட்ட ஆணையத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆணையமானது மூன்று ஆண்டு காலம் செயல்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
22வது சட்ட ஆணையமானது முழுநேரத் தலைவரைக் கொண்டிருக்கும்.
இது நான்கு முழுநேர உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். மேலும் சட்ட விவகாரங்கள் துறை மற்றும் சட்டமன்றத் துறை ஆகியவற்றின் செயலாளர்களும் இந்த ஆணையத்தில் இடம் பெறுவர்.
சட்ட ஆணையங்கள்
இது ஒரு சட்டரீதியற்ற ஒரு அமைப்பாகும். இது அவ்வப்போது இந்திய அரசால் அமைக்கப் படுகின்றது.
இது 1955 ஆம் ஆண்டில் முதல் முறையாக அமைக்கப்பட்டது.
இதன் பின்னர் ஒவ்வொரு 3 வருடங்களுக்கு ஒரு முறை இது அமைக்கப்படுகின்றது.
இதுவரை, இந்திய சட்ட ஆணையமானது 277 அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.