3வது உலக புதுப்பிக்கத் தக்க ஆற்றல் முதலீட்டுச் சந்திப்பு மற்றும் கண்காட்சி (RE-Invest 2020)
December 1 , 2020 1695 days 649 0
இந்த மாநாடானது மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகத்தினால் (Ministry of New and Renewable Energy - MNRE) நடத்தப்படுகின்றது.
2020 ஆம் ஆண்டிற்கான இந்த மாநாட்டின் கருத்துரு, “நீடித்த ஆற்றல் மாற்றத்திற்கான புத்தாக்கம்” என்பதாகும்.
ஆஸ்திரேலியா, பிரான்சு, டென்மார்க், ஜெர்மனி, ஐக்கியப் பேரரசு, மாலத் தீவுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை Re-Invest மாநாட்டின் பங்காளர் நாடுகளாகும்.
குஜராத், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகியவை இதன் பங்காளர் மாநிலங்களாகும்.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனானது உலகின் 4வது மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனாகும்.
இது அனைத்து மிகப்பெரிய பொருளாதார நாடுகளிடையே மிக அதிக வேகத்தில் வளர்ந்து வருகின்றது.
தற்பொழுது இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறனானது 136 ஜிகா வாட்களாக உள்ளது.
இது நமது மொத்தத் திறனில் 36% ஆகும்.
இந்தியாவின் வருடாந்திர ஆற்றல் உற்பத்தித் திறனானது 2017 ஆம் ஆண்டு முதல் நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட மின்னாற்றலை விட முன்னிலையில் உள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில், இந்தியாவானது இரண்டரை மடங்கு என்ற அளவில் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளது.
புனல் (நீர்) மின்சாரமானது மத்திய மின்சாரத் துறை அமைச்சகத்தினால் தனியாக நிர்வகிக்கப் படுகின்றது. அதனால் இது MNRE திட்டங்களில் இணைக்கப் படவில்லை.