இந்தியா ஜெர்மனியை பின்னுக்குத்’ தள்ளி உலகின் 4வது பெரிய வாகனச் சந்தையாக மாறியுள்ளது.
முதல் இடத்தை சீனாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் உள்ளன.
இந்த அறிக்கையை ஆர்கனைசேஷன் இன்டர்நேஷனல் டெஸ் கன்ஸ்ட்ரக்டர்ஸ் டி ஆட்டோமொபைல்ஸ் (OICA) அல்லது சர்வதேச வாகனத் தயாரிப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் இந்தியா மூன்றாவது பெரிய வாகனச் சந்தையாக மாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இருப்பினும், இதற்காக 2021 ஆம் ஆண்டில் 4,448,340 அலகுகளை விற்பனை செய்த ஜப்பானை இந்தியா விஞ்ச வேண்டும்.