தொலைதொடர்புத் துறையானது சமீபத்தில் நாட்டில் 5G சோதனைகளை மேற்கொள்வதற்கு தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.
தொலைதொடர்புத் துறையானது இந்தியாவில் 5G சோதனைகளை மேற்கொள்ளச் செய்வதற்கு வேண்டி பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன், ஐடியா மற்றும் MTNL (Mahanagar Telephone Nigam Limited) போன்ற தொலைதொடர்பு சேவை வழங்கும்நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிறுவனங்கள் நோக்கியா, எரிக்சன், சாம்சங் உள்ளிட்ட அசல் கைபேசி உபகரண உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சொந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 5G சோதனைகளை மேற்கொள்ள உள்ளது.
சீன நிறுவனங்களுக்கு 5G சோதனைகளை மேற்கொள்வதற்கு அனுமதி இல்லை.