இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் புதுடெல்லியில் 5வது சர்வதேச அம்பேத்கர் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாடானது பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் வர்த்தக சபை ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தின் நலன்களைக் காப்பதற்காக நமது அரசியலமைப்பில் பல விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, மற்றும் பொருளாதார நலன்களை சிறப்புக் கவனத்துடன் அரசு மேம்படுத்த வேண்டும் என்று அரசியல் அமைப்பின் 46வது சட்டப்பிரிவு அறிவுறுத்துகிறது.