TNPSC Thervupettagam

அணைப் பாதுகாப்பு மசோதா – 2019

December 6 , 2021 1364 days 563 0
  • 2019 ஆம் ஆண்டு அணைப் பாதுகாப்பு மசோதாவானது மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டது.
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02 அன்று மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டது.
  • நாட்டில் உள்ள குறிப்பிட்ட அனைத்து அணைகளின் பாதுகாப்பான செயல்பாட்டினை உறுதி செய்வதற்காக வேண்டி முறையான கண்காணிப்பு, ஆய்வு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்கான வசதியினை இந்த மசோதா வழங்குகிறது.  
  • ஒரு தேசிய அணைப் பாதுகாப்புக் குழுவினை நிறுவவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
  • அது அணைப் பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்கவும், அதற்கு அவசியமான ஒழுங்கு முறைகளைப் பரிந்துரைக்கவும் வேண்டி பணியாற்றும்.
  • நாட்டில் அணைப் பாதுகாப்பு கொள்கை, வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகளை செயல்படுத்துவதற்காக வேண்டிய செயல்முறைகளை அமல்படுத்தும் ஒரு ஒழுங்கு முறை அமைப்பாக தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தினை நிறுவுவதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.
  • மாநில அரசுகள், அணைப் பாதுகாப்பிற்கான மாநிலக் குழுவை அமைக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்