TNPSC Thervupettagam

75வது உலக சுகாதார கூடுகை

May 28 , 2022 1083 days 573 0
  • 75வது உலக சுகாதார மாநாடானது சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடத்தப் பட்டு வருகிறது.
  • கோவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கிய பிறகு நேரடியாக நடத்தப்படும் முதல் சுகாதார கூடுகை இதுவாகும்.
  • "அமைதிக்கான ஆரோக்கியம், ஆரோக்கியத்திற்கான அமைதி" என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருத்துருவாகும்.
  • இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்புச் சேவை வழங்கும் முன்களப் பணியாளர்களாக விளங்கும் இந்தியாவின் ஒரு மில்லியன் ஆஷா (அங்கீகாரம் பெற்ற சமூகச் சுகாதாரப் ஆர்வலர்) பணியாளர்கள், 2022 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதாரத் தலைவர்கள் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்