9,000 ஆண்டுகள் பழமையான நீருக்கடியில் உள்ள தளம் கண்டுபிடிப்பு
April 22 , 2026 102 days 192 0
வட அமெரிக்காவின் ஹூரான் ஏரியின் அடியில் 9,000 ஆண்டுகள் பழமையான, நீரில் மூழ்கிய மனிதக் குடியிருப்பினைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
வேட்டையாடும் குழிகள், விலங்குகளைத் துரத்திச் செல்லும் பாதைகள் மற்றும் கருவிகள் சேமித்து வைக்கும் இடங்கள் போன்ற கல் அமைப்புகள் இந்தக் கண்டுபிடிப்பில் அடங்கும்.
இது கிரேட் லேக்ஸ் பகுதியில் மனிதச் செயல்பாடுகளுக்கான மிக ஆரம்பகாலச் சான்றாகக் கருதப்படுகிறது.
பழங்காலக் கரீபோ வேட்டை நடைமுறைகளுடன் தொடர்புடைய சுமார் 80 தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தத் தளமானது தற்போது நீருக்கடியில் உள்ள பழங்கால நிலப்பாலமான அல்பேனா-ஆம்பர்லி முகட்டில் அமைந்துள்ளது.
ஏரியின் தெளிவான மற்றும் குறைந்த வண்டல் படிவுகள் உள்ள நிலைமைகள் காரணமாக இந்த அமைப்புகள் அப்படியே பாதுகாக்கப்பட்டுள்ளன.
பனி யுகத்திற்குப் பிறகு ஆரம்பகால மனிதர்களின் உயிர்வாழ்வு மற்றும் தகவமைப்பு பற்றிய நுண்ணறிவுகளை இந்தக் கண்டுபிடிப்புகள் வழங்குகின்றன.